மேகங்களை ஆய்வு செய்து தற்போதைய வானிலை கணிப்பின்படி மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி உட்பட கடலோர மாவட்டங்களில் மழை துவங்க வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் ‘மழை’ ராஜ் கூறியுள்ளார்.
10 ஆம் தேதி வரை தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
இரண்டு அல்லது மூன்று தினங்களில் மழை பெய்யும் என பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தமிழ்.வெப்துனியா.காம் வெளியிடப்பட்ட வானிலை கணிப்பின்படி நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, கடலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மார்ச் 1 ஆம் தேதி மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.