தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் ஆட்சி அமைப்பதற்காக பிற கட்சித் தலைவர்களைச் சந்திப்பதுதான் வழக்கம். ஆனால் ஜர்தாரி அமெரிக்கத் தூதரைப் போய் சந்தித்து இருப்பது பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
தி நேஷன் பத்திரிகை தனது தலையங்கத்தில் ஜர்தாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானியர்களின் அடிமைப் புத்தி காரணமாகவே அமெரிக்கா பல ஆண்டுகளாக சுந்திரமாக பாகிஸ்தான் விடயங்களில் தலையிட்டு வருகிறது என்று அந்த இதழ் கூறியுள்ளது.