பாகிஸ்தான் ஏவுகணை சோதனை!
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (20:00 IST)
பாகிஸ்தான் 1,300 கி.மீட்டர் துரம் சென்று தாக்கும் திறன் கொண்ட நடுத்தர இரக கோரி ஏவுகணையை இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமையன்று பாகிஸ்தான் ஷாகின்-1 ஏவுகணை குழுவினரின் களப்பயிற்சி நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து 700 கி. மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் ஷாகின்-1 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது.
அதனைத் தொடர்ந்து இன்று கோரி ஏவுகணைகுழுவின் களபயிற்சி நிறைவடைந்ததை உணர்த்தும் விதமாக 1,300 கி,மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் கோரி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்ததாக பாக்கிஸ்தான் இராணுவ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை அதிபர் பர்வேஷ் முஷாரஃப், இராணுவ தளபதி கியானி, உயர் இராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் முன்னிலையில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வேற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் முஷாரஃப் ஏவுகணைக் குழுவினரை பாராட்டியுள்ளார்.
நடுத்தர இரக ஏவுகணை திட்டத்தை பாகிஸ்தான் கடந்த 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. கோரி -I ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அடுத்த அடுத்த சோதனைகளில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் கோரி , காஜ்னவி, ஷாஹின், அப்தாலி ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியது.
இவைகளைத் தவிர பாகிஸ்தான் 2,000 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் ஷாகின்-II இரக இடைத் தூர ஏவுகணைத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.