படையினரோ அல்லது கடற்படையினரோ அல்லது விமானப் படையினரோ தன்னிச்சையாகப் பொதுமக்களின் வீடுகளைச் சோதனையிட முடியாது. அதற்கு அனுமதியளிக்கவும் கூடாது.
அத்தியாவசிய காரணத்துடன் வீடுகளைச் சோதனையிட வேண்டுமானால், அதற்கு முன்னர் அந்த வீடுகள் அமைந்துள்ள பகுதிக்குரிய காவல் நிலைய அதிகாரியின் அனுமதியைப் பெற்று, அந்த காவல் நிலைய காவலர்களுடனேயே குறிப்பிட்ட வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.
அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல், இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணிவரை பொதுமக்களின் வீடுகளுக்குள் செல்லக்கூடாது.
கொழும்பில், நேற்று கைது செய்யப்பட்டவர்கள் யாராவது இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருந்தால், அவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, அவர்கள் குற்றமற்றவர்கள் எனில் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.