கன்னிவெடித் தாக்குதல்: புலிகளின் ராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் பலி!
ஞாயிறு, 6 ஜனவரி 2008 (14:19 IST)
மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வைத்த கன்னி வெடியில் சிக்கி விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளரான கர்ணல் அருள்வேந்தன் என்ற சாள்ஸ் உள்ளிட்ட 4 பேர் பலியாயினர்.
இலுப்பைக்கடவைப் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு அருள்வேந்தன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கன்னி வெடியில் சிக்கி வாகனம் வெடித்து சிதறியது.
இதில் அருள்வேந்தன் என்ற சாள்ஸ், சுகந்தன, வீரமாறன், காவலன் ஆகியோர் பலியாயினர்.