மலே‌சியா : ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்க‌ள் 5 பேரு‌ம் ‌விரை‌வி‌ல் ‌விடுதலை!

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (19:00 IST)
மலேசியாவில் இந்தியர்களுக்கசமஉரிமை கே‌ட்டு நடத்தப்பட்ட பேர‌ணி‌யி‌ன் எதிரொலியாக உ‌ள்நா‌ட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌பநிர்வாகிகள் 5 பேரையு‌ம் விரைவில் விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ச‌ர்வதேம‌னிஉ‌ரிமக‌ண்கா‌ணி‌ப்பஅமைப்பின் ஆசியப் பிரிவு துணை இயக்குநர் எலைன் பியர்ஸன், ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌பஅமை‌‌ப்‌பி‌ன் ‌நி‌ர்வா‌கிகளவிடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 5 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவர் என நம்புவதாக பியர்ஸன் தெரிவித்தார்.

கட‌ந்நவம்பர் 25-ஆ‌ம் தேதி கோலால‌ம்பூ‌ரி‌லநட‌த்த‌ப்ப‌ட்பேர‌ணியை‌ததூண்டி விட்டதாக, ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌பஅமை‌ப்பைச் சேர்ந்த உதயகுமார், மனோகரன், ஞானபத்ரி ராவ், கெங்காதரன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 5 பேர் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உ‌ள்நா‌ட்டு‌பபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்களவிசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் வைத்திருக்க முடியு‌ம். இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்