ஹின்ட்ராஃப் தலைவர்களுக்குத் தடுப்புக்காவல்!
வியாழன், 13 டிசம்பர் 2007 (18:33 IST)
இந்திய உரிமை முன்னணி (ஹின்ட்ராஃப்) அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமார் உட்பட ஐந்து பேரை மலேசிய அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
மலேசியாவில் இந்திய வம்சாவழியை சேர்ந்த 20 ஆயிரம் பேர் கடந்த மாதம் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, "அவர்கள் அனைவரும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்" என்று வக்கீல் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் அமைப்பை சேர்ந்த வக்கீல் உதயகுமார், மனோகரன், கங்காதரன், கணபதிராவ், வசந்தகுமார் ஆகிய ஐந்து பேக்கு தடுப்புக்காவல் போடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவில் மலேசிய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பிரதமர் அப்துல்லா பதாவி கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் வக்கீல் உதயகுமார், கணபதிராவ், வேதமூர்த்தி ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு தெடரப்பட்டுள்ளது.