பா‌கி‌ஸ்தா‌ன் ஏவுகணை சோதனை வெ‌ற்‌றி!

Webdunia

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:00 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் தனது பாப‌ர் ஏவுகணையை இ‌ன்று வெ‌ற்‌றிகரமாக‌ச் சோ‌தி‌த்து‌ள்ளது. இ‌ந்த எவுகணை ‌நில‌ப்பர‌ப்‌பி‌ல் 700 ‌கி.‌மீ. தொலை‌வி‌ல் உ‌ள்ள இல‌க்குகளை‌த் தா‌க்கவ‌ல்லது.

பாபர் ஏவுகணை சோதனை வெ‌ற்‌றிபெ‌ற்றது கு‌றி‌த்து அ‌ந்நா‌ட்டு ‌வி‌ண்வெ‌ளி ஆ‌ய்வு ‌நிறுவனமான ஐ.எ‌ஸ்.‌பி.ஆ‌ர். வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌யி‌ல், 'ஆயுத‌க் க‌ட்டமை‌ப்பு மே‌ம்பா‌ட்டி‌ல் ம‌ற்றொரு மை‌ல்க‌ல்' எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

அதேநேர‌த்‌தி‌ல், 1,500 ‌கிலோ எ‌டையு‌ம், 22 அடி ‌நீளமு‌ம் உ‌ள்ள பாப‌ர் ஏவுகணை அணு ஆயுத‌ங்களை‌ச் சும‌ந்து செ‌ல்லு‌ம் ஆ‌ற்ற‌ல் உடையதா எ‌ன்பது தெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

ஏவுகணை சோதனையை பா‌கி‌ஸ்தா‌ன் அரசு உயர‌திகா‌ரிக‌ள் கூ‌ட்டு‌க் குழு‌வி‌ன் தலைவ‌ர் தா‌ரி‌க் ம‌ஸ்‌ஜீ‌த் உ‌ள்‌ளி‌ட்ட உயர‌திகா‌ரிக‌ள் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு ஊடக‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்