அதிகாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் 5,398 குடும்பங்களைச் சேர்ந்த 22,332 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. வவுனியாவில் இருந்து சுமார் 3,071 குடும்பங்களைச் சேர்ந்த 10,302 இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான இருப்பிடம், உணவு, குடிநீர் வசதிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. யு.என்.எச்.சி.ஆர், ஆக்ஸ்பாம், உலக உணவுத் திட்டம், வேர்ல்ட் விசன், சேவா நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்கி வருகின்றன'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.