ஐ.நா கு‌ற்ற‌ச்சா‌ற்‌‌றி‌ல் உ‌ண்மை‌யி‌ல்லை:‌ சி‌றில‌ங்க அரசு எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (16:49 IST)
சி‌றில‌ங்கா‌வி‌ல் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்க‌ள் தொட‌ர்வதாக ஐ‌க்‌கிய நாடுக‌ள் அவை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ளி‌ல் உ‌ண்மை‌யி‌ல்லை எ‌ன்று ‌சி‌‌றில‌ங்கா அமை‌ச்ச‌ர் ச‌ம்‌பி‌க்க ரணவ‌க்க கூ‌றியு‌ள்ளா‌ர்.

சி‌றில‌ங்கா‌வி‌ல் ‌சி‌த்ரவதைகளு‌ம், வ‌ன்முறைகளு‌‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது எ‌ன்று ‌ஐ‌.நா‌வி‌ன் ம‌னிதஉ‌ரிமைக‌ள்‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌தி‌‌நி‌தி மான்பிரெடநொவாக் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

அத‌ற்கு மறு‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அமை‌ச்ச‌ர் ச‌ம்‌பி‌க்க ரணவ‌க்க கூ‌றுகை‌யி‌ல், சி‌றில‌ங்கா‌வி‌ல் வ‌ன்முறைக‌ள் அ‌திக‌ரி‌த்‌திரு‌ப்பதாக நொவா‌க் கூ‌றி‌யிரு‌ப்பது உ‌ண்மை‌யி‌ல்லை எ‌ன்றா‌ர்.
மேலு‌ம், அர‌சி‌ற்கு எ‌திராக அ‌றி‌க்கை வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்ற நோ‌க்க‌த்துட‌ன்தா‌ன் அவ‌ர்க‌ள் வரு‌கி‌ன்றன‌ர

மே‌ற்க‌த்‌திய நாடுக‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு, ‌விடுதலை‌‌ப் பு‌லிகளுட‌ன் பே‌ச்சு நட‌த்துமாறு எ‌ங்களை வ‌ற்புறு‌த்தவே இ‌ந்த அ‌றி‌க்கை வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதை அரசு ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌க் கூடாது. ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு வரு‌ம் ஐ,நா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளை‌ச் ச‌ந்‌தி‌ப்பதை அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச த‌வி‌ர்‌க்க வே‌ண்டும் எ‌ன்று‌ம் ரணவ‌க்க கூ‌றினா‌ர்.




வெப்துனியாவைப் படிக்கவும்