லெபனானுக்கு 6 லட்சம் டாலர் உதவி: இந்தியா அறிவிப்பு!
Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (16:04 IST)
வடக்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களைச் சீரமைக்கவும், புதுப்பிக்கவும் 6,00,000 டாலர் நிதியுதவி செய்யப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்கள் லெபனானில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருவதற்காக நிதியுதவி வேண்டி, லெபனான் அதிபர் ஃபாட் சினியோரா கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரைத் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், லெபனானுக்கு 6,00,000 டாலர் நிதியுதவி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
மற்றநாடுகளுடன் இணக்கமாக முறையில் தங்கள் மண்ணில் சுதந்திரமாக வாழ பாலஸ்தீன மக்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவின் உதவி, அவசரத் தேவையான தொலைதொடர்புத் துறையில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும்.