பாகிஸ்தானைவிட இந்தியா முக்கியம்: அமெரிக்கா!
Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (13:22 IST)
பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது உலகளவில் வளர்ந்துவரும் இந்தியாவின் உறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்ற அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, ஒப்பந்தம் கைவிடப்படுமோ என்ற அச்சத்தை அமெரிக்காவிற்கு உருவாக்கியுள்ளது.
எனவே ஒப்பந்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவுகள் மிகவும் நல்லநிலையில் உள்ளன என்று அமெரிக்க ராணுவப் பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் கிளாட் கூறியுள்ளார்.
தீவிரவாதி ஒசாமா பின்லேடனைத் தேடும் முயற்சிகள், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் உள்ளிட்ட விவகாரங்களில் பாகிஸ்தானைவிட இந்தியா மிகவும் உதவியாக உள்ளது.
எனவே, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் உறவு நீண்டகாலத்திற்கு நீடிக்க வேண்டியது முக்கியம். இந்தியா உலகளவில் வளர்ந்துவரும் சக்தியாக உள்ளது. அது மெதுவாக நிகழ்ந்தாலும், எதிர்காலத்தில் முக்கியத்துவம் மிக்கதாக வலுப்பெறும் என்று கிளாட் கூறியுள்ளார்.