''விடுதலைப் புலிகளின் பயிற்சி பெற்ற கரும்புலி அணியினர், அநுராதபுரம் விமானப் படைத் தளத்திற்குள் நுழைந்து இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து புலிகளின் விமானங்களும் இரண்டு குண்டுகளை வீசின.
இந்தத் தாக்குதல்களில் நான்கு அதிகாரிகள் உட்பட ஐந்து விமானப் படையினர் உயிரிழந்தனர். விமானப் படைத் தளத்திலிருந்து இருந்து இதுவரை 20 புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
புலிகளின் தாக்குதலில் எம்ஐ. - 24 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டும், கே-8 ரக பயிற்சி விமானங்கள் இரண்டும் சேதமடைந்தன.
மேலும் வவுனியாவில் இருந்து உதவிக்கு வந்த பெல் - 212 ரக ஹெலிகாப்டர் மிகிந்தலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் இருவர் உள்பட நான்குபேர் உயிரிழந்தனர். இருபது படையினர் காயமடைந்தனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வடக்கில் தாக்கப் போகிறோம் என்று அரசு அறிவித்ததன் விளைவாக, புலிகள் இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக யாழ் வனவிலங்கு சரணாலயப்பகுதியில் தாக்குதல்களை நடத்தினர்.
தற்போது அநுராதபுரம் விமானப் படைத் தளத்தைத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்''. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
''தாக்குதல் நடந்த பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது. விடுதலைப் புலிகளின் விமானங்கள் தப்பிவிட்டன'' என்று சிறிலங்கா ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கர கூறியுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து புலிகளின் பேச்சாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், ''எங்களின் தரைப்படையினரும், விமானப் படையினரும் இணைந்து நடத்திய தாக்குதல் இது. இத்தகைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் தொடரும்.
வடக்குப் பகுதிக்கான சிறிலங்கா இராணுவத்திற்கு அநுராதபுரம் விமானத் தளம் முக்கியமான தளமாகும். சிறிலங்கா விமானப் படையின் 8 விமானங்களைச் சேதப்படுத்தியுள்ளோம்.
கரும்புலி அணியைச் சேர்ந்த 21 பேர் தரைவழியாக படைத் தளத்தை தாக்கினர். 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு கரும்புலிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது.
அநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் ஒரு பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது'' என்றார்.