மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (21:14 IST)
சந்தையில் மிகச் சிறந்த வணிக முறைகளையும், ஒழுங்குமுறைத் திட்டங்களையும், வாக்கு முறைகளையும் நிர்ணயிப்பதற்கு மிகச் சிறந்த பொருளாதாரக் கருவியான மெக்கானிசம் டிசைன் தியரி எனும் அணுகுமுறையை உருவாக்கிய லியோனிக் ஹர்விக்ஸ், அக்கருத்தியலை மேம்படுத்திய எரிக் மாஸ்கின், ரோஜர் மயர்சன் ஆகிய மூன்று அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!

பங்குச் சந்தையில் இருந்து வர்த்தகம் வரை முதலீடுகளை நிறுவனங்கள் மட்டுமின்றி, சராசரி தனி மனிதர்களும் குறைந்தபட்ச இழப்புடன் முதலீடு செய்வதற்கான ஓர் வழிமுறையை இவர்கள் மூவரும் உருவாக்கியது வணிகத்தின் போக்கை நிர்ணயிக்கும் பல்வேறு காரணிகளை அறியாதவர்கள் கூட தங்களுடைய முதலீடுகளை சிறப்பாக வரையறை செய்து பயன்பெற வழிவகுக்கிறது என்று நோபல் தேர்வுக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்