முஷாரஃ‌பி‌ன் பாதுகா‌ப்பு ஹெ‌லிகா‌ப்ட‌ர் நொறு‌ங்‌கியது : 4 அ‌திகா‌ரிக‌ள் ப‌லி!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (16:40 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌பி‌ன் பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌‌‌லிரு‌ந்த இராணுவ ஹெ‌லிகா‌ப்ட‌ர் இ‌ன்று காலை முஷாப‌ர் நக‌‌ரி‌ன் அரு‌கி‌ல் ‌விழு‌ந்து நொறு‌ங்‌கிய‌தி‌ல் பாதுகா‌ப்பு அ‌திகா‌ரிக‌ள் 4பே‌ர் இற‌ந்தன‌ர்.

அ‌திப‌ரி‌ன் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் மேஜ‌ர் ஜெனர‌ல் ர‌ஷ‌ீ‌த் கரே‌சி உ‌ட்பட‌ப் பல‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன் வடமே‌ற்கு மாகாண‌‌த்‌தி‌ல் கட‌ந்த 2005ஆ‌ம் ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் மாத‌ம் 8 ஆ‌ம் தே‌தி ஏ‌ற்ப‌ட்ட பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ல் 73,000 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 3.5 கோடி பே‌ர் ‌வீடுகளை இழ‌ந்தன‌ர்.

இ‌‌ந்த‌ப் பே‌ரிழ‌ப்‌பி‌ன் இர‌ண்டா‌ம் ஆ‌ண்டு ‌நினைவுநா‌ள் முஷாப‌ர் நக‌ரி‌ல் இ‌ன்று அனுச‌ரி‌க்க‌ப்ப‌ட்டது. அ‌தி‌ல் கல‌ந்துகொ‌ள்ள அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் செ‌ன்றபோது இ‌ந்த ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

அ‌திப‌ர் முஷாரஃ‌ப் பாதுகா‌ப்பாக உ‌ள்ளா‌ர் எ‌ன்று ராணுவ‌த்‌தி‌ன் முத‌ன்மை‌ச் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் வ‌கீ‌த் அ‌ர்சா‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்