கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அயல் உளவு அமைப்பான ரா (Research and Analysis Wing - RAW) பிரதிநிதி, பெண் ஒருவர் மூலமாக சீனாவுக்கு தகவல்களை பரிமாறியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டார்.
1975 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ரவி நாயர் என்ற அந்த அதிகாரியின் நடவடிக்கைகள் மற்றும் பெண் தொடர்பு குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் மூலமாக புதுடில்லியில் உள்ள ரா தலைமையகம் விசாரித்தது. இதைத் தொடர்ந்து ரவி நாயரை இந்தியா திரும்ப உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதற்கு முன்னர் அமெரிக்கா, பாகிஸ்தான் , பூட்டானில் ரவி நாயர் பணிபுரிந்த போதும் அவர் மீது இப்படியொரு குற்றச்சாற்று எழுந்தது. அப்போதெல்லாம் உடனே அவர் வேறு ஒரு பொறுப்புக்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக ராவின் அதிகாரியாக பணிபுரிந்த ரபீந்தர் சிங் என்பவர் அமெரிக்க உளவாளியாக மாறி அமெரிக்காவில் அடைக்கலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.