ஈரா‌க்‌கி‌ல் அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் தா‌க்குத‌ல் : 25 ‌‌‌‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (18:34 IST)
ஈரா‌க் தலைநக‌ர் பா‌க்தா‌த்‌தி‌ல் இரு‌ந்து 80 கிலோ ‌‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் உ‌ள்ள கா‌லி‌ஸ் பகு‌தி‌யி‌ல் அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் இ‌ன்று நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 25 ‌தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

பா‌க்தா‌‌த்‌தி‌‌ற்கு வட‌க்‌கி‌ல் உ‌ள்ள ‌‌ஷியா ஆதரவு ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் குடி‌யிரு‌ப்புக‌ள் ‌மீது இ‌ன்று அ‌திகாலை அமெ‌ரி‌க்க‌ராணுவ ‌விமான‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து கு‌‌‌ண்டுமழை பொ‌ழி‌ந்தன.

ஈரா‌ன் புர‌ட்‌சி‌ப் படையு‌ட‌ன் தொட‌ர்புடைய ‌தீ‌விரவா‌த‌த் தலைவ‌னை‌க் கு‌றிவை‌த்து‌த் தா‌க்குத‌ல் நட‌‌த்த‌ப்ப‌ட்டதாக அமெ‌ரி‌க்க ராணுவ‌ம் கூ‌றியு‌ள்ளது. அவ‌ன் ஈரா‌னி‌ல் இரு‌ந்து பா‌கி‌‌ஸ்தானு‌க்கு ஆயுத‌ங்க‌ள் கட‌த்‌தி வ‌‌ந்தா‌ன்.

ராணுவ‌ம் தனது தா‌க்குதலை‌த் தொட‌ங்‌கியவுட‌ன் ‌தீ‌விரவா‌திகளு‌‌ம் ‌திரு‌ப்‌பி‌த் தா‌க்‌கின‌ர். து‌ப்பா‌க்‌கி ஏ‌ந்‌திய ‌தீ‌விரவா‌திக‌ள் ‌சில‌ர் கையெ‌றி கு‌‌ண்டுகளை ‌வீ‌சியதாகவு‌ம், ஒருவ‌ன் ம‌ட்டு‌ம் ‌விமான எ‌தி‌ர்‌ப்பு ‌பீர‌ங்‌கியை இய‌க்‌கியதாகவு‌ம் ராணுவ‌ம் கூ‌றியு‌ள்ளது.

மோத‌லி‌ன் இறு‌தி‌யி‌ல் 2 க‌ட்டட‌ங்க‌ள் மு‌ற்‌றிலு‌ம் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ல் 24 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 28 ‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். அவ‌ர்க‌ளி‌ல் பல‌ர் கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளன‌ர்.

முத‌ல்க‌ட்ட கு‌ண்டு ‌‌வீ‌ச்‌சி‌ல் காயமடை‌ந்தவ‌ர்களை கா‌ப்பா‌ற்ற வ‌ந்த பொதும‌க்க‌ள் ‌சிலரு‌ம் இ‌தி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று ராணுவ‌ அ‌திகா‌ரி ஒருவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்