தே‌ர்தலை‌ தள்ளிவை‌க்க நேபாள அரசு கோ‌ரி‌க்கை!

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (12:38 IST)
நவ‌‌ம்ப‌‌ர் 22ஆ‌ம் தே‌தி நடைபெறு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த நாடாளும‌ன்ற‌த் தே‌ர்தலை ஒ‌த்‌தி வை‌க்குமாறு தே‌ர்த‌ல் ஆணைய‌த்தை நேபாள அரசு கோ‌ரியு‌ள்ளது.

நேபாள‌த்‌தி‌ல் ‌நில‌விவரு‌ம் ‌சி‌க்கலான அர‌சி‌யி‌ல் சூழ‌‌ல் தே‌ர்தலு‌க்கு‌ப் ‌பிறகு ச‌‌ரியா‌‌கி‌விடு‌ம் எ‌ன்று ப‌ல்வேறு நாடுகளு‌ம் எ‌திபா‌ர்‌த்து வரு‌கி‌ன்றன.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ன்று காலை நேபாள ‌பிரதம‌‌ர் அலுவலக‌த்‌தி‌‌ல் இரு‌ந்து தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ற்கு கடித‌ம் ஒ‌ன்று அனு‌ப்ப‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌தி‌ல், இ‌ன்று நடைபெறுவதாக உ‌ள்ள வே‌ட்புமனு‌த் தா‌க்க‌ல் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ல்லா தே‌ர்த‌ல் நடவடி‌க்கைகளையு‌ம் தள்ளிவை‌க்குமாறு கோ‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பு‌திய தே‌தி எதையு‌ம் அரசு ப‌ரி‌ந்துரை செ‌ய்ய‌வி‌ல்லை.

மு‌ன்னதாக‌த் தே‌ர்த‌ல் தாமதமாகலா‌ம் எ‌ன்று ஆளு‌ம் நேபா‌ளி கா‌ங்‌கிரசு‌க் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாளரு‌ம், அமை‌தி ம‌ற்று‌ம் மறுக‌ட்டமை‌ப்பு அமை‌ச்சருமான ரா‌ம் ச‌ந்‌திர பெளட‌ல் கூ‌றி‌யிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்