ஜப்பானில் பயங்கர பூகம்பம்

Webdunia

ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (15:07 IST)
ஜப்பான் அருகே உள்ள குவாம் என்ற குட்டி தீவில் இன்று முற்பகலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானுக்கு வடகிழக்கு பகுதியில் பசிபிக் கடலில் குவாம் என்ற குட்டி தீவு உள்ளது. இது அமெரிக்க ராணுவ முகாமாகவும் செயல்படுகிறது. இந்த தீவில் இருந்து 215 மைல் தூரத்தில் பசிபிக் கடலில் இன்று பகல் 11 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் போது குவாம் தீவில் கட்டிடங்கள் அதிர்ந்தன. கட்டடங்களுக்குள் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளிய ஓடி வந்தனர்.

பூகம்ப மையம் கடலுக்கு அடியில் 6 மைல் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

கடலுக்குள் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததால் குவாம் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சுனாமி எதுவும் தாக்கவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தோ உயிரிழப்பு குறித்த இதுவரை எந்த தகவலும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்