பாகிஸ்தான் பிரதமராக ஏற்கனவே இரண்டு முறை பதவி வகித்த பெனாசிர் புட்டோ, தொடர்ந்து 3ம் முறையாக பிரதமர் பதவி வகிக்க அனுமதித்தால், அதிபர் தேர்தலில் முஷாரஃப்புக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த பெனாசீர், "பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினை குறித்து இருவரும் மனம் விட்டுப் பேசினோம். ஆனால் முஷாரஃப் உடன் வந்த அதிகாரிகள் இந்த சந்திப்பை விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் அதிபர் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த சில யோசனைகள் வழங்கினேன், ஆனால் அவற்றை முஷாரஃப் இதுவரை அமல்படுத்தவில்லை என்பதால், ரகசிய சந்திப்பை வெளிப்படுத்திவிட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் அபுதாபி நகரில், முஷாரஃப் மற்றும் பெனாசிர் இருவரும் ரகசிய பேச்சு நடத்தியதாக பாகிஸ்தான் ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அதை அப்பொழுது யாரும் நம்பவில்லை. இப்பொழுது பெனாசிரே முஷாரஃபை தான் சந்தித்துப் பேசியதை உறுதிப்படுத்தியுள்ளார்.