பாகிஸ்தானுக்கு செல்லவேண்டாம்: அமெரிக்கா!

Webdunia

ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (14:45 IST)
மிகவும் தேவையானால் மட்டுமே பா‌கி‌ஸ்தானு‌‌க்கு செல்ல வேண்டும். அங்கு இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தால் திரும்பி அமெரிக்காவுக்கு வந்து விடுங்கள் என்று அ‌ந்த நாடு எ‌ச்ச‌ரி‌க்கை எடு‌த்து‌ள்ளது.

ச‌‌‌மீப‌த்‌தி‌ல் அமெரிக்கா, பாகிஸ்தா‌ன் ஆ‌கிய நாடுகளுக்கு சர்வதேச தீவிரவாதி ஓசாமபின்லேடன் மிரட்டல் விடு‌த்‌திரு‌ந்தா‌ன். வீடியோவில் தோன்றிய பின்லேடன், ''அமெரிக்காவுக்கு துணை போகும் பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு எதிராக தாக்குதல் நடத்துங்கள், மசூதிக்குள் ராணுவத்தை அனுப்பிய முஷரப்பை பழிவாங்குவோம்'' என்று எச்சரிக்கை விடுத்தான்.

இதனால், பாகிஸ்தானில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நட‌த்த அ‌‌ல்கொ‌ய்தா ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது. அங்குள்ள அமெரிக்கர்களுக்கும் ஆபத்து ஏ‌ற்படு‌ம் சூ‌ழ்‌நிலை உருவா‌கியுள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் தேவையானால் மட்டுமே அங்கு செல்ல வேண்டும் ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தால் திரும்பி அமெரிக்காவுக்கு வந்து விடுங்கள் என்றும் கூ‌றியு‌ள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்