சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : ஐ.நா.!
Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (19:58 IST)
செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒர ு நாள் கூட்டத்தில் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார ்! இந்தக் கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். "எதிர்காலம் நம் கைகளில ் : பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உள்ள சவால ்" என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம ், ஐ.நா. பொது அவையின் வருடாந்திர விவாதக் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு நடைபெறகிறது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மாநிலங்கள் அல்லது நாடுகளின் 70க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாலியில் நடைபெறவுள்ள ஐ.நா. பருவ நிலை மாற்ற மாநாட்டிற்குத் தயார் செய்யும் வகையிலும ், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உள்ள அரசியல் பங்களிப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த உயர்மட்டக் கூட்டம் அமையும். புதிய பன்னாட்டு சுற்றுச்சூழல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பாலி மாநாட்டில் தொடங்குகிறது. வருகிற டிசம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐ, நா அமைத்துள்ள பருவ நிலைமாற்ற ஆய்வு உதவிக் குழு தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறது. "சுற்றுச்சூழலுக்குத் தகுந்தவாறு நம்மை மாற்றியமைத்துக் கொள்வத ு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களைப் பெருக்குதல ், வனங்களை அழிக்காதிருத்தல ், வளங்களைத் திரட்டுதல் என்பன உள்ளிட்ட எல்லா வழிகளிலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுதல் பற்றி பாலியில் விவாதிக்கப்பட வேண்டும ்" என்று பான் கி மூன் கூறியுள்ளார். சுற்றுச்சூழல் சிக்கலை முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாக மாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பருவநிலை மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட அரசுகளுக்கிடையிலான குழு அண்மையில் அளித்த அறிவியல் முடிவுகளுக்கு அரசியல் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் பாலியில் ஏற்படும். 2009 ஆம் ஆண்டிற்குள் ஒப்பந்தத்தை அடையத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் ஒவ்வொரு நாடும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தற்போதுள்ள கியோட்டோ திட்ட வரையறைக் காலம் 2012 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பான் கி மூன் கூறியுள்ளார். பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பூமியின் வெப்பநிலை 4.5டிகிரி அல்லது அதற்குமேல் அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் ஏற்கெனவே தெரியத் தொடங்கியுள்ளன. உலக அளவில் உள்ள சராசரி வெப்ப அதிகரிப்பு விழுக்காட்டைக் காட்டிலும் ஆர்க்டிக் வட்டத்தில் இருமடங்கு வேகமாக வெப்பம் அதிகரிக்கிறது என்றும் இதற்கு மனிதர்கள்தான் காரணமென்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட அரசுகளுக்கிடையிலான குழு தெரிவித்துள்ளது. புவி வெப்ப மயமாதலின் விளைவுகள் உலகின் பிற பகுதிகளிலும் உணரப்படுகின்றன. குறிப்பாக உயிர்ச் சமநிலையையும ், வாழ்க்கை முறைகளையும் அது மிகவும் பாதித்துள்ளது. தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆப்பிரிக்கா போன்ற வறண்ட நிலங்களில் பருவநிலை மாற்றத்தால் அங்கு வாழும் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. அதேநேரத்தில் உலகின் பிற பகுதிகளில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. எப்பொழுதும் இல்லாத வகையில் மோசமான பருவ மாற்றங்கள் உண்டாகின்றன. அண்மையில் நடைபெற்ற ஐ.நா.பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பான் கி மூன ், " இந்த வழியில் நாம் தொடர்ந்து செல்லமுடியாத ு. உலகளவில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம். பருவநிலை மாற்றம் நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. குறிப்பாக ஏழை மக்களை அது மிக மோசமாகவும ், கொடுமையாகவும் தாக்குகிறத ு" என்று கூறியிருந்தார். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடமுள்ள பொருளாதாரத்தையும ், தொழில்நுட்ப ஆதாரங்களையும் பயன்படுத்தி பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். வளர்ந்த நாடுகளும் மாசைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன ், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க உதவ வேண்டும் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
செயலியில் பார்க்க x