இந்தோனேஷியாவில் கடந்த புதனன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
தங்கள் ஊர்களை விட்டு வெளியேறிய மக்கள் ஊருகளுக்கு திரும்பிவருவதாக உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலங்களை மீட்கும்போது மேலும் 5 சடலங்களை எடுத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் பலியானார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதனன்று ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவு பூகம்பத்தால் அங்கு கடும் சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு சுமார் 60 பின்னதிர்வுகள் ஏற்பட்டன. இதில் இரண்டு அதிர்வுகள் ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கும் மேலாக பதிவானது. 10 அடி உயர பேரலை கடற்கரை மாவட்டங்களை தாக்கியது. ஆனால் சுனாமி அலைக்கு ஒருவரும் பலியாகவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.