இந்தியாவிற்கு ஆஸ்ட்ரேலியா யுரேனியம் ஏற்றுமதி செய்தால் சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்தை அது மீறியதாகிவிடும் என்று சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து ஆஸ்ட்ரேலிய அதிகாரிகள் கூறுகையில், அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முழுமையாக இணைத்துக் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே ஆஸ்ட்ரேலியா யுரேனியம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியை கடைபிடிப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இந்த எதிர்ப்பு தேவையற்றது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அணு ஆயுதப் பரவலை கடுமையாக எதிர்த்து வரும் அமைப்பு, இந்தியா முழு அளவிலான அணுப் பாதுகாப்பு எல்லைகளுக்குள் வரவில்லை எனில் ஆஸ்ட்ரேலியா, இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்தால் அது சர்வதேச ஒப்பந்தத்தை மீறிய செயலே என்று வலியுறுத்தி கூறிவருகிறது.
இந்திய-அமெரிக்க 123 அணுசக்தி ஒப்பந்தத்தின் படி ஆக்கபூர்வ செயல்களுக்கான அணுசக்தி உற்பத்தி ஆலைகளை மட்டுமே கண்காணிக்க முடியும். ராணுவ நிர்மாணங்களை கண்காணிக்க முடியாது