அமெரிக்கா அணு ஆயுதச்சோதனை எதையும் நடத்தாது. மற்றொரு நாடு நடத்த முயன்றால் அதனை ஊக்குவிக்காது. அதே நேரத்தில், இந்தியா தனது இறையாண்மையுடன் கூடிய உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று அமெரிக்க அயலுறவு பேச்சாளர் ஷான் மெக்கார்மெக் கூறியுள்ளார்!
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மெக்கார்மெக், 123 ஒப்பந்தத்தின் படி, அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்டால் அதன் மீது முடிவெடுக்கக்கூடிய உரிமை அமெரிக்க அதிபருக்கு உள்ளது. அதே நேரத்தில் தனது தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தனித்த கொள்கையை கடைபிடிக்கும் உரிமையும் இந்தியாவிற்கு உள்ளது என்று கூறியுள்ளார்.
123 ஒப்பந்தம் ஏற்கப்பட்டால், அது இந்தியா எதிர்காலத்தி்ல் அணு ஆயுதச் சோதனை நடத்துவதை கட்டுப்படுத்திவிடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாற்றிவரும் நிலையில், அது குறித்து அமெரிக்க அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் அளித்துள்ள இந்த விளக்கம் குறிப்பிடத்தக்கது.