பெருவில் பயங்கர நிலநடுக்கம்

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (11:26 IST)
பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.9 என பதிவாகியுள்ளது. ஒரு நிமிட நேரம் தொடர்ந்து குலுங்கிய இந்த நிலநடுக்கத்தின் மையம், லிமாவில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் வீடுகளும், கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன. மின்சார மற்றும் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் பெரு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஆலன் கார்சியா தெரிவித்தள்ளார்.

நிலநடுக்கத்தை அடுத்து பெரு, சிலி, ஈக்குவேடார் மற்றும் கொலம்பியா பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்