இதோனேசியாவின் ஜாவா தீவில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் ஜகர்தாவின் கிழக்கு கடல்பகுதியில் மிக ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்தது. இதனால் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி இந்தோனேசியாவின் வேறு சில பகுதிகளிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தை அடுத்து அடுக்குமாடி கட்டடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக தரைத் தளத்திற்கு வந்து விட்டனர். நிலநடுக்கத்தால் உயிர்சேதம், பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்த தகவல்கள் உனடியாக கிடைக்கவில்லை.
அதேபோல், ஜப்பானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. டோக்யோ மாகாணத்திலிருந்து 1600 கி.மீ. தொலைவிலுள்ள ஒகினவா கடற்பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.