பாகிஸ்தானிற்குள் நேரடித் தாக்குதலா? புஷ் நேரடி பதில் தர மறுப்பு!

Webdunia

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (20:30 IST)
பாகிஸ்தான் எல்லைக்குள் பதுங்கியுள்ள அல் கய்டா பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா நேரடித் தாக்குதல் நடத்துமா என்று கேட்டதற்கு, அதிபர் புஷ் பதிலளிக்க மறுத்துள்ளார்!

அமெரிக்கா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அமித் கர்சாயுடன் இணைந்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போது, நடவடிக்கைக்கு உகந்த உளவுச் செய்தி கிட்டுமானால் நிச்சயம் அமெரிக்கா நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.

நடவடிக்கை எடுக்கக்கூடிய உளவுத் தகவல்கள் கிடைக்குமென்றால், அப்பொழுது கல் கய்டாவினரை நீதிக்கு முன் கொண்டுவரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன் என்று புஷ் கூறினார்.

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷா·பை கொல்வதற்கு திட்டமிட்ட அதே பயங்கரவாதிகள்தான் அமெரிக்காவின் தேடுதலில் உள்ளார்கள் என்றும், அதுபற்றிய தகவல்களை பாகிஸ்தான் அரசிற்கு தெரிவித்து வருவதாகவும் கூறிய புஷ், அவர்கள் எங்கு பதுங்கியிருக்கின்றார்கள் என்கின்ற தகவல் கிடைத்தால் நாங்கள் நிச்சயம் கதையை முடிப்போம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்