ஐ.நா.பொது அவையில் பிரதமர் உரை

Webdunia

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (13:26 IST)
வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ஐ.நா. பொது அவையில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.

192 நாடுகளை உறுப்பினரகளாக கொண்ட ஐ.நா. பொதுக் குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்குகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல் நாளில் அமெரிக்க அதிபர் புஷ் உரையாற்றுகிறார்.

கூட்டத்தின் நான்காவது நாளான செப்டம்பர் 28 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். அதனைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் புஷ்சுடன், பிரதமர் மன்மோகன் சிங், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், சர்வதேச அளவில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

ஐ.நா. பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக ஒருநாள் நடைபெறும் புவி வெப்பம் அடைதல் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் புஷ்சுக்கு ஐ.நா. செயலர் பாங்கி மூன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த கருத்தரங்கில் புஷ் கலந்து கொள்வாரா? என்பது இன்னும் உறுதிபடுத்தப்பட தெரிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்