காங்கோவில் ரயில் விபத்து: 100 பேர் பலி

Webdunia

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (16:05 IST)
காங்கோவில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 100 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

காங்கோவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ரயில் தண்டவாளங்களில் தான், தற்போதும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு அடிக்கடி ரயில் விபத்துகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இலெபோ மற்றும் கனங்கா நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ஓட்டுனர் எவ்வளவோ முயன்றும் ரயிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை.

ரயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதில் 7 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் ரயிலில் பயணம் செய்த நூற்றுக்கும் அதிகமான பயணிகள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், பலர் ரயில் பெட்டிகளில் சிக்கி இருப்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்