ஹனீப் இந்தியா திரும்ப : ஆஸ்ட்ரேலியா அனுமதி

Webdunia

சனி, 28 ஜூலை 2007 (16:19 IST)
பெங்களூரு மருத்துவர் ஹனீப் இந்தியா திரும்ப ஆஸ்ட்ரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் இன்று நாடு திரும்புகிறார்.

இங்கிலாந்து கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு வெடிப்பு சதி திட்டம் தொடர்பாக பெங்களூரு மருத்துவர் ஹனீபை ஆஸ்ட்ரேலிய காவல் துறையினர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்தனர். அவர் மீது பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், ஹனீபின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவர் ஹனீப் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ரேலிய அரசின் தலைமை வழக்கறிஞர் டாமியன் பக் நேற்று அறிவித்தார். வழக்கு திரும்ப பெறப்பட்டதால் ஹனீப் நேற்று சிறையில் இருந்து விடுதலையானார்.

இதனிடையே, ஹனீப் ஆஸ்ட்ரேலியாவில் தொடர்ந்து தங்கி இருக்க அரசு எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்க வில்லை என்று அந்நாட்டு குடியமர்வு துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். ஹனீப் நாடு திரும்ப ஆஸ்ட்ரேலிய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, அவர் இன்று நாடு திரும்புகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்