ஜப்பானில் கடும் நிலநடுக்கம்

Webdunia

திங்கள், 16 ஜூலை 2007 (11:31 IST)
ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலுக்கு அடியில் உருவான இந்த நிலநடுக்கத்தின் மையம் நிகாடா என்ற பகுதியில் அமைந்திருந்தது. ரிக்டர் அளவு கோலில் 6.6 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் உணரப்பட்டதும் கட்டங்களிலும், வீடுகளிலும் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

நிலநடுக்கத்தின் காரணமாக புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஜப்பானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தோ, பொருள் சேதம் குறித்தோ இதுவரை எந்த தகவலும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்