இலங்கையில் கடும் மோதல் : குண்டு வீச்சு, 6 ராணுவத்தினர் பலி!

Webdunia

வெள்ளி, 6 ஜூலை 2007 (16:48 IST)
இலங்கையில் விடுதலைப் புலிகளின் இலக்குகளை குறிவைத்து சிறிலங்க ராணுவம் தாக்குதல் நடத்திய அதேவேளையில் மட்டக்களப்பில் நடந்த மோதலில் சிறிலங்க ராணுவத்தினர் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பு, மன்னார் பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் இலக்குகளை குறிவைத்து சிறிலங்க விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலா எனுமிடத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மீட்க சிறிலங்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்க போர்ப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறியுள்ளது.

தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மீட்க சிறிலங்க ராணுவம் மேற்கொண்ட முயற்சியை கடும் பதிலடி கொடுத்து விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.

உடுப்பிமலையை (தொப்பிகலா) நோக்கி முன்னேறிய சிறிலங்க ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே நடந்துள்ள மோதலில் ஒரு மேஜர் உட்பட 6 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்க ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.

இந்த மோதலில் மேலும் 7 ராணுவத்தினர் காயமடைந்ததாகவும் சமரசிங்கே கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்