கொழும்புவில் இருந்து தமிழர்களை மகிந்த ராஜபக்சே வெளியேற்றிய நடவடிக்கை ஹிட்லரின் நடவடிக்கையை ஒத்தது என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கண்டனம் தெரிவித்துள்ளார்!
2வது உலகப் போரின் போது யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கறுப்பின மக்கள் மீது தென் ஆப்ரிக்க இனவெறி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போன்றதுதான் தமிழர்களை வெளியேற்றும் ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கையும் என்று கூறியுள்ள ரணில் விக்ரமசிங்கே, எல்லா மக்களும் சுதந்திரமாக வாழும் உரிமையும், தாங்கள் வசிக்கும் இடங்களை தெரிவு செய்யும் உரிமையும் உள்ளது. அரசிற்கு யார் மீது சந்தேகம் இருப்பினும் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி தடுப்பு காவலில் வைக்க வேண்டுமா அல்லது விடுதலை செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய் வேண்டும். மக்களை பலவந்தமாக விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது அவர்களின் கோபத்தைக் கிளறி மேலும் குண்டு வெடிப்புகள் நிகழவே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.