மன்மோகன் - சீன அதிபர் சந்திப்பு: எல்லை பிரச்சனை குறித்து பேச்சு

பெர்லின் நகரில் சீன அதிபர் ஹூ ஜிண்டோவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து, இரு நாட்டு எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி 8 நாடுகளின் உச்சி மாநாடு ஜெர்மனியில் உள்ள ஹெல்லிஜெண்டம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி புஷ், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் ஜெர்மனி சென்று உள்ளார். அங்கு பெர்லின் நகரில் சீன அதிபர் ஹூண்டோவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார்.

அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது, எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா மீண்டும் உரிமை கொண்டாடி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்