ஈராக்கில் கடந்த 3 நாட்களில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவத் தலைமை கூறியுள்ளது!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 2 இடங்களில் நடந்த சாலையோர குண்டு வெடிப்புகளில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமுற்றனர்.
கடந்த சனிக்கிழமை பாக்தாத், தியாலா, நைவி, மேற்கு பாக்தாத் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் ராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டனர் என அமெரிக்க ராணுவத் தலைமை கூறியுள்ளது.
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈராக் மீது போர் தொடுத்து ஆக்கிரமித்த அமெரிக்க ராணுவம், மே மாத இறுதி வரை 3,490 ராணுவத்தினரை இழந்துள்ளது.