அரசிலமைப்புச் சட்டத்திருத்தம் தொடர்பான கருத்துக் கணிப்பு நடைமுறை மசோதாவை ஜப்பானிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய அரசிலமைப்பு சட்டம் இன்னும் 3 ஆண்டுகளில் அமுலுக்கு வரும். கடந்த ஏப்ரல் 13 ந் தேதி இந்த மசோதாவுக்கு மக்கள் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயின் லிபரல் டெமாகிரெடிக் கட்சியும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள கொமடோ கட்சியும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.