அழிந்துவரும் கடல் ஆமைகள், 280 உடல்கள் கறை ஒதுங்கின
புதன், 23 ஜனவரி 2013 (18:28 IST)
FILE
கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்று சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட ரிக்கா, இருப்பக்கமும் பசபிக் மற்றும் கரீபியன் கடலால் சூழப்பட்ட நாடாகும். கோஸ்ட ரிக்கா கடல் பகுதியில் அரிய வகையான கடல் ஆமைகள், சால்பிஷ் மற்றும் மார்லின் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன.
இந்த நிலையில் கோஸ்ட ரிக்காவின் டூள்ஸ் வளைகுடா கரை ஓரங்களில் அரிய வகை கடல் ஆமைகளின் உடல்கள் அவ்வப்போது ஒதுங்கிவருகின்றன. இதுவரை 280 அரியவகை கடல் ஆமைகள் இதுபோல கரை ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் கடல் சார் உயிரின ஆர்வலர்கள் பெரிதும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து கடல் ஆமைகளின் இறப்பிற்கு, மனிதர்களின் நடவடிக்கைகள் காரணமா? என்ற நோக்கத்தில் ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.
டூள்ஸ் வளைகுடாவில் அதிகரித்துவரும் மீன்பிடி தொழிலால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும், பிற பகுதிகளிலும் கடல் ஆமைகள் ஒதுங்குவதால் ஓசா தீபகற்ப பகுதிகளிலும் கடற்சாற் உயிரினங்களை கண்கானிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.