காற்றாலை மின் உற்பத்தியால் கார்பன் வெளியேற்றம் குறைந்தது!

புதன், 13 பிப்ரவரி 2008 (14:29 IST)
கட‌ந்த ஆ‌ண்டு கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி மூல‌ம் பூ‌மி‌யி‌ல் இரு‌ந்து வாயு ம‌ண்டல‌த்து‌க்கு வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌ம் கா‌ர்ப‌ன்-டை-ஆ‌க்ஸைடி‌ல் 9 கோடி ட‌ன்க‌ள் க‌ட்டு‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உலக‌ம் முழுவது‌ம் கட‌ந்த ஆ‌ண்டு 20,000 மெகாவா‌ட் ‌‌நிறுவு‌த்திற‌ன் கொ‌ண்ட கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌நிலைய‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாகவு‌ம், இ‌தி‌ல் அமெ‌ரி‌க்கா, ‌ஸ்பெ‌யி‌ன், ‌சீனா ஆ‌கிய நாடுக‌ள் கட‌ந்த ஆ‌ண்டு கா‌ற்றாலை ‌மி‌‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌திற‌ன் அ‌திக‌ரி‌ப்பு‌க்கு அடி‌ப்படை எ‌ன்று ப‌ன்னா‌ட்டு எ‌ரிச‌க்‌தி குழும‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உலக‌ம் முழுவது‌ம் இதுவரை மொ‌த்த‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ள கா‌ற்றாலை உ‌ற்ப‌த்‌தி ‌‌நிலைய‌ங்க‌ளி‌ன் மொ‌த்த உ‌ற்ப‌த்‌தி நிறுவு‌த்திற‌ன் அளவு 94,112 மெகாவா‌ட் எ‌ன்று ‌பிர‌ஸ்ல‌ஸ்யை தலைமை‌யிடமாக‌க் கொ‌ண்ட ப‌ன்னா‌ட்டு எ‌ரிச‌க்‌தி குழும‌த்‌தி‌ன் செயலாள‌ர் ‌‌ஸ்டி‌வ்சாய‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ப‌ன்னா‌ட்டு எ‌ரிச‌க்‌தி குழும‌த்‌தி‌ன் உ‌ய‌ர்‌ந்தப‌ட்ச எ‌தி‌ர்பா‌ர்‌ப்புகளையு‌ம் தா‌ண்டி கா‌ற்றாலை எ‌ரிச‌க்‌தி உ‌ற்ப‌த்‌தி வள‌ர்‌ச்‌சிஅமையு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கா‌ற்றாலை ‌மி‌‌ன்ச‌க்‌தி த‌ற்போது உலக‌ம் முழுவது‌ம் மு‌க்‌கிய எ‌ரிபொரு‌ள் பய‌ன்பா‌ட்டு ‌நிலை‌க்கு வ‌ந்து‌ள்ளதாகவு‌ம், ப‌ன்னா‌ட்டு எ‌ரிபொரு‌ள் ச‌‌ந்தை‌யி‌ல் மு‌க்‌கிய கார‌ணியாக ‌விள‌ங்குவதோடு, 70 -‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுக‌ளி‌ல் க‌ணிசமான அளவு ‌பிற எ‌ரிச‌க்‌திகளுட‌ன் இணை‌த்து ‌அ‌ன்றாட‌ப் ப‌ணிகளு‌க்கு பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வருவதாகவு‌ம் ஸ்டீ‌வ்சாய‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்கா 2006 ஆ‌ம் ஆ‌ண்டை‌க் கா‌ட்டிலு‌ம் இர‌ண்டு மட‌‌ங்கு கா‌ற்றாலை உ‌ற்ப‌த்‌தி ‌‌நிறுவு திறனை அ‌திக‌ரி‌த்து கட‌ந்த அ‌ண்டு 5,244 மெகாவா‌ட் ‌நிறுவு ‌திறனை‌க் கொ‌ண்டு‌ள்ளது. இது அமெ‌ரி‌க்கா‌வி‌ன் பு‌திய ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி அள‌வி‌ல் 30 ‌விழு‌க்காடு ஆகு‌ம். கட‌ந்த ஆ‌ண்டு அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌திற‌ன் 45 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌த்து, ‌கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி தகு‌தி 16.8 ‌ஜிகாவா‌ட்டாக உ‌ள்ளது.
வரு‌ம் 2009 ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கு‌ள் த‌ற்போது கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் மு‌ன்ன‌ணி‌யி‌ல் உ‌ள்ள ஜெ‌ர்ம‌னியை அமெ‌ரி‌க்கா மு‌ந்‌தி‌விடு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சீனா கட‌ந்த 2006 ஆ‌ம் ஆ‌ண்டு அடி‌ப்படை‌யி‌ல் கா‌ற்றாலை உ‌ற்ப‌த்‌தி ‌திறனை 156 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌த்து கட‌ந்த ஆ‌ண்டு 3,449 மெகாவா‌ட் கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌நிலைய‌ங்களை அமை‌த்து‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌‌நிறுவு‌த்‌திற‌ன் அடி‌ப்படை‌யி‌ல் 6,000 மெகாவா‌‌ட் எ‌ன்ற அள‌வி‌ல் உல‌கி‌ன் கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌நிறவு‌த்‌திற‌ன் ப‌ட்டிய‌லி‌ல் 5 -வது இட‌த்‌தி‌ல் உ‌ள்ளது. இதே ‌நிலை‌யி‌ல் கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி துறை‌யி‌ன் வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் அமையு‌‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், வரு‌ம் 2015 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் ‌சீனா‌வி‌ன் கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌‌த்‌தி 50,000 மெகாவா‌ட்டாக இரு‌க்கு‌ம் எ‌ன்று ‌சீன மரபுசாரா எ‌ரிச‌க்‌தி‌த் துறை கூ‌ட்டமை‌ப்பு சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ளது.

கட‌ந்த ஆ‌ண்டி‌ல் கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌திறனை அ‌திக‌ரி‌த்த நாடுக‌ளி‌ல் ஐரோ‌ப்‌பிய கூ‌ட்டமை‌ப்பு‌க்கு உ‌ட்ப‌ட்ட ‌ஸ்பெ‌யி‌னி‌ன் முய‌ற்‌சிதா‌ன் எ‌ன்று ‌ஸ்டி‌வ் சாய‌ர் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.‌ஸ்பெ‌யி‌ன் கட‌ந்த ஆ‌ண்டு ம‌ட்டு‌ம் 3,515 மெகாவா‌ட் ‌நிறுவு‌த்‌திற‌ன் கொ‌ண்ட கா‌ற்றாலைகளை அமை‌த்து உ‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டி‌ல் கா‌ற்றாலை ‌நிறுவு‌த்‌திற‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் அமெ‌ரி‌க்காவு‌க்கு அடு‌த்த‌ ‌நிலையை‌ப் பெ‌ற்று‌ள்ளது. இத‌ன் மூல‌ம் ‌ஸ்பெ‌யி‌ன் நா‌ட்டி‌ன் ஆ‌ண்டு கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி தகு‌தி 15 ‌ஜிகா வா‌ட்டாக த‌ற்போது உ‌ள்ளது.

ஐரோ‌ப்‌பிய நாடுக‌ளி‌ல் 8,662 மெகாவா‌ட் ‌திறனுடைய பு‌திய கா‌ற்றாலைக‌ள் கட‌ந்த ஆ‌ண்டு அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. ஒ‌ட்டு மொ‌த்த‌த்‌தி‌ல் கட‌ந்த ஆ‌ண்டு 57,135 மெகாவா‌ட் கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌நிறுவு‌த்‌திற‌ன் உலக‌ம் முழுவது‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இத‌ன் மூல‌ம் ஆ‌ண்டு‌க்கு 9 கோடி ட‌ன்க‌ள் கா‌ர்ப‌ன்-டை-ஆ‌க்ஸைடு வாயு ம‌‌ண்டல‌த்து‌க்கு பூ‌மி‌யி‌ல் வெ‌ளியே‌ற்ற‌ப்படுவது தடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம், சராச‌ரியாக ஒரு கா‌ற்று ஆ‌ண்டு‌க்கு இ‌ந்த‌ நிறுவு‌த்‌திற‌ன் மூல‌ம் 119 டி‌‌ரி‌‌ல்‌லிய‌ன் வா‌ட் ம‌ணி ‌மி‌ன்சார‌ம் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது எ‌ன்று‌ம் ‌ஸ்டீ‌வ் சாய‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஐரோ‌ப்‌பிய கூ‌ட்டமை‌ப்‌பி‌ல் உ‌ள்ள நாடுக‌ள் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌க்க த‌ற்போது ‌பிற எ‌ரிச‌‌க்‌தி தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ங்களை ‌விட கா‌ற்றாலை ‌மி‌ன்ச‌க்‌தி தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம்தா‌ன் அ‌திக‌ம் வள‌ர்‌ச்‌சியடை‌ந்து வருவது ந‌ல்லது எ‌ன்று‌ம், இது பு‌திதாக ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌நிறுவு‌த்‌திற‌னி‌ல் 40 ‌விழு‌க்காடு அளவு எ‌ன்று இ.ட‌பி‌ள்யு. தலைமை அலுவல‌ர் ‌கி‌றி‌ஸ்டிய‌ன் கேஜே‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

உல‌கி‌ல் கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌உ‌ற்ப‌த்‌தி‌த் ‌திற‌ன் ஜெ‌ர்ம‌னி (22.3 ‌ஜிகா வா‌ட்), அமெ‌ரி‌க்கா (16.8 ‌ஜிகா வா‌ட்), ‌ஸ்பெ‌யி‌ன் (15.1 ‌ஜிகா வா‌ட்), இ‌ந்‌தியா (8 ‌ஜிகா வா‌ட்), ‌சீனா (6.1 ‌ஜிகா வா‌ட்). பொருளாதார அடி‌ப்படை‌யி‌ல் கட‌ந்த ஆ‌ண்டு உலக கா‌ற்றாலை ச‌ந்தை‌யி‌ன் ம‌தி‌ப்பு ரூ.1,46,000 கோடியாக இரு‌ந்து‌ள்ளது. இ‌ந்த தொகை‌க்கு பு‌திய உ‌ற்ப‌த்‌தி இய‌ந்‌திர‌ங்க‌ள் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்