அனாதைச் சிறுவர்கள் கொலை காரர்களா? டெல்லி போலீஸ் திமிர் விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு!

வியாழன், 1 ஆகஸ்ட் 2013 (14:05 IST)
டெல்லியில் ஆதரவற்று விடப்படும் சிறுவர்கள் பற்றி டெல்லி காவல்துறை மிக்வும் திமிர் தனமாக விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட்டுள்ளது கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது.

முன்னணி ஆங்கில நாளேடுகளில் கால்பக்கத்திற்கு கருப்பு வெள்ளை நிறத்தில் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது! அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
FILE

ஒரு கவலை தோய்ந்த சிறுவனின் முகம், அதனருகே இடம்பெற்றுள்ள வாசகத்தில், "இவனுக்கு வெங்காயம் எப்படி வெட்டுவது என்பதை கற்றுக் கொடுக்க உதவுங்கள். இல்லை என்றால், தலையை எப்படி வெட்டுவது என்று யாரேனும் கற்றுக் கொடுத்து விடுவார்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

ஆதரவற்று கிடக்கும் சிறார்களுக்கு ஏதேனும்...

கைத்தொழில் கற்றுக் கொடுக்க உதவுமாறு அளிக்கப்பட்ட இந்த விளம்பரம், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளை எழுப்பியதால், திரும்பப் பெறப்பட்டுவிட்டது

ஒரு புறம் அனைவருக்கும் கல்வித் திட்டம் குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், மறு புறம் அது போன்ற சட்டங்களை பாதுகாக்கவேண்டிய போலீஸ் துறையே அவர்களுக்கு சிறு தொழில் கற்றுக் கொடுங்கள் என்றும் இல்லையென்றால் தலையை வெட்டும் கிரிமினல் ஆகிவிடுவார்கள் என்றும் விழிப்புணர்வு விளம்பரம் கொடுப்பது.

டெல்லி போலீஸின் விளம்பரப்பிரியத்திற்குத்தான் ஐபிஎல் சூதாட்டம், புகழ்பெற்றவர்களை வம்புக்கு இழுப்பது என்று எவ்வளவோ உள்ளது பாவம் நிராதரவான சிறுவர்களின் வாழ்க்கையையா தங்களது கேவலமான சுய முன்னேற்றத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுத்துவது?

படு கேவலம்!!

வெப்துனியாவைப் படிக்கவும்