உள்ளாடையில் கைவைத்தால் 3,800 வோல்ட் மின்சாரம் பாயும்!

வியாழன், 4 ஏப்ரல் 2013 (16:18 IST)
FILE
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில் டெல்லி கற்பழிப்பை தொடர்ந்து கடுமையான சட்டங்களும் பாய்ந்துள்ள வேளையில் தற்போது பெண்களை இத்தகைய பலாத்காரங்களிலிருந்து காக்க புதிய உள்ளாடையை உருவாக்கியுள்ளனர் சென்னை மாணவர்கள்.

Society Harnessing Equipment (சுருக்கி அழைத்தால் SHE) என்று அழைக்கப்படும் இது உள்ள உள்ளாடையை அணிந்து கொண்டால் போதும். பாலியல் பலாத்காரம் செய்ய முயல்பவர்கள் மீது சுமார் 3,800 வோல்ட் மின்சாரம் பாயும்.

அதாவது பலாத்காரத்தில் மார்புப் பகுதியில் கூடுதல் அழுத்தம் பிரயோகிக்கப்படும்போது கடுமையான மின்சாரம் பாயுமாம்!

இந்த உள்ளாடை சுமார் 80 முறையாவது மின்சாரத்தை பாய்ச்சும் திறன் கொண்டதாம். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் ஜிபிஎஸ் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதால் சம்பவம் நடைபெறும் இடம் பற்றிய தகவலை உடனே அது போலீஸ் நிலையத்திற்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பி விடுமாம்!

பெண்களை போகப்பொருளாகப் பார்க்கும் காமவெறியர்களுக்கு இத்தகைய அதிர்ச்சி மருத்துபம் தேவைதான்!

வெப்துனியாவைப் படிக்கவும்