இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் சகோதரர்களே!

திங்கள், 15 டிசம்பர் 2008 (16:41 IST)
காஷ்மீரின் முஸ்லீம்களிடம் நான் பேசுகின்றேன். அவர்கள் தங்களுடைய வாழ்விலும், வரலாற்றிலும் ஓர் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு விதியால் தள்ளப்பட்டுள்ளார்கள். காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்ட அந்நியர்களை தடுத்து நிறுத்தி உங்களை காக்க வேண்டிய (காஷ்மீர்) மகாராஜாவின் ஒரு ராணுவ வீரனோ அல்லது ஒரு காவலனோ கூட இங்கு இல்லை. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ள கொள்ளையர்கள், ஸ்ரீநகரில் இருந்து சில மைல் தூரத்திற்கு வந்துவிட்டார்கள். அவர்கள் இஸ்லாம் எனும் முழக்கத்தை எழுப்புகின்றனர். என்னுடன் நிற்கப்போகின்றீர்களா? அல்லது அவர்களுடனா என்பதை நீங்கள் முடிவெடுங்கள்.

என்னோடு நிற்பது என்று நீங்கள் முடிவு செய்தால், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் சகோதரர்களே எனும் கொள்கையுடன் அவர்களோடு நீடித்து வாழ ஒப்புக்கொள்கின்றோம் என்று அர்த்தம். இவ்வாறு நான் பேசுவதை துரோகியின் (கஃபீர்) மொழியாக நீங்கள் கருதினால், உங்களுடைய வாட்களை உயர்த்துங்கள். துரோகிகளை நீங்கள் தாக்கவோ, கற்பழிக்கவோ விரும்பினால், நான்தான் உங்களின் முதல் துரோகி, ஆகவே, எனது இல்லத்தில் இருந்து, எனது குடும்பத்தில் இருந்து அதனை துவக்குங்கள்.

(1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (நாட்டு பிரிவினைக்குப் பிறகு) பாகிஸ்தான் அரசால் தூண்டிவிடப்பட்ட பழங்குடி கொள்ளையர்கள் காஷ்மீரை கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தபோது, தலைநகர் ஸ்ரீநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான காஷ்மீரிகள் மத்தியில் ஷேக் அப்துல்லா பேசியது)

வெப்துனியாவைப் படிக்கவும்