பொதுவாக பெண்ணைப் பெற்றவர்கள்தான ், தனது பெண்ணிற்கு தங்க நக ை, பாத்திரங்கள ், கட்டில ், பீரே ா, மணமகனுக்கு நகைகள ், வண்டி மட்டுமல்லாமல் பணமுடிப்புகளையும் தருவார்கள். இதுதான் காலம் காலமாக நமக்குத் தெரிந்த வரதட்சணை முறை. இதுவும் ஆரம்ப காலத்தில ், புதிதாக குடித்தனம் துவங்கும் தங்களது பிள்ளைகளுக்குத் தேவையானதை பெற்றோர்கள் கொடுத்து உதவினர். இதுதான் நாளடைவில் பெரும் வரதட்சணை பேயாக மாறி பெண் வீட்டாரை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. வரதட்சணையும் மணமகன் வீட்டாரின் எதிர்பார ் ப்பிற்கு தகுந்தாற்போல் ஆடம்பரமாக திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலையில் பல பெற்றோர்கள் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளனர்.
உரிய வயதில் மணமாகாமல் பல கன்னிகள், முதிர் கன்னிகளாக மாறும் அவலநிலை, வரதட்சணை என்ற சமுதாயத்தின் அங ் கீகாரம் பெற்ற சமூக குற்றத்தால் ஏற்பட்டுள்ளது. பல இளம் பெண்கள் வரதட்சனை கொடுமைக்கு ஆளாகி துன்பத்தில் உலன்று வருகின்றனர். இவை பற்றிய செய்திகள் தினந்தோறும் பத்திரிக்கைகளில் வெளி வருகின்றன. இதெல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான் என்ற ு, லக்னோவில் உள்ள சில கிராமங்களில் நடந்து வரும் விஷயம் ..
..
நம்மை சொல்ல வைக்கிறது. பெண் சிசுக் கொலையின் காரணமா க, நகரத்தை விட கிராமங்களில் ஆண்கள் விகிதத்தை விட பெண்கள் விகிதம் குறைவாக இருக்கும். எனவே திருமண வயதை அடைந்த ஆணுக்கு ஏற்ற பெண் கிடைப்பது அரிதாகிறது. ஒரு பெண்ணிற்கு பலர் போட்டி போடும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில ், லக்னோவில் உள்ள கிராமங்களில் பெண்களின் புகைப்படம் மற்றும் அனைத்து விவரங்களையும் ஒரு தரகரிடம் கொடுத்து விடுகின்றனர் பெண்ணின் பெற்றோர். அவரிடம் உள்ள பெண்களின் புகைப்படங்களைப் பார்த்து அவற்றில் பிடித்த பெண்ணை பேசி திருமணம் முடித்து வைக்க தரகர்களுக்கு மணமகன் வீட்டார் ஒரு தொகையைத் தர வேண்டும். தொகை என்றால் சும்மா 100, 200 அல்ல. 10,000 முதல் 80,000 ரூபாய் வரை அந்த தொகை இருக்கும். அதில் பெரும் தொகை பெண்ணின் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படுகிறது. இந்த தொகை பெண்ணின் தோற்றம ், கல்வித் தகுத ி, குடும்பப் பின்னணி போன்றவற்றைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
பின்னர்தான் அந்த பெண்ணுக்க ு, நிச்சயிக்கப்பட்ட ஆணுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த முறையினால் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மணமகள் வீட்டினர் பலன் அடைகின்றனர்.
திருமணமும் எந்த ஆடம்பரமும் இன்றி பெண் வீட்டில் நடத்தப்படுகிறது. திருமணம் முடிந்ததும் மணமகன் வீட்டிற்கு பெண் அழைத்துச் செல்லப்படுகிறார். ஆனால ், 10,000 முதல் 20,000 ரூபாயாவது செலவு செய்ய முடிந்த குடும்பத்தினரின் மகனுக்கு மட்டும்தான் மணமகள் கிடைப்பாள் என்ற அவல நிலை நிலவுகிறது. மணமகளுக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் லக்னோவின் திக ா, பேஹ்ர ி, தரைய ா, தண்டாபுர ், ரதேகிரம ், அம்பேத்கார் ஆகிய 6 கிராமங்களில் நடந்து வருகிறது. இந்த முறையினால் வரதட்சணை வருவதோட ு, தங்களது பெண் மாமியார் வீடுகளில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதில்லை என்ற மகிழ்ச்சியும் பெண்ணைப் பெற்றவர்களின் மனதில் பாலை வார்க்கும் விஷயமாகும். இவ்வாறு திருமணம் முடிந்து செல்லும் பெண்களும ், தங்களால் தங்களது குடும்பத்திற்கு சிறு உதவி கிட்டியது என்ற மன மகிழ்ச்சியை அடைகின்றனர். இந்த நடைமுறை கடந்த 3 ஆண்டுகளாக இக்கிராமங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
யார் கண்டத ு? பெண் சிசுக் கொலை என்ற கொடூரத்தால் இந்தியாவின் கேரளாவைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் உங்கள் பேரனுக்கும் வரதட்சணை கொடுத்துத்தான் திருமணம் முடிக்கும் நிலை ஏற்படலாம். எனவே பெண் சிசுக் கொலைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.
செயலியில் பார்க்க x