அலையும் வலங்கைமான் மக்கள்! அரசாணை அமல்படுத்த கோரிக்கை!

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (15:44 IST)
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் வட்டத்தை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மாற்றம் செய்யும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 4.5 ஆண்டுகளாகிறது. இவ்வுத்தரவு இதுவரையில் அமல்படுத்தப்படவில்லை.

தஞ்சை மாவட்டக் காவல்துறை வரம்புக்குள் சில ஆண்டுகளுக்கு முன்பே வலங்கைமான் மாற்றப்பட்டு விட்டது. ஆனால் வருவாய்த்துறை உள்ளிட்டவைகள் திருவாரூர் மாட்டம் வரம்புக்குள் நீடிப்பதால் பொதுமக்கள் அலைய நேரிடுகிறது.

1996ம் ஆண்டு மாவட்டத்துடன் இருந்த வலங்கைமான் திருவாரூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் நடத்தினர். இதனால் 2001ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் வலங்கைமான் வட்டத்தை மீண்டும் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்ப்பட்டது.

இதுவரை வலங்கை மான் வட்டம் திருவாரூர் மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மேலும் தற்போது தொகுதி மறுசீரமைப்புக் குழுவினர் வலங்கைமான் சட்டப்பேரவைத் தொகுதியை வெகு தூரத்தில் உள்ள நன்னிலம் தொகுதயுடன் இணைக்கப் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவும் இப்பகுதியினரை கவலையடையச் செய்துள்ளது. தஞ்சாவூருக்கு வருகை தரும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 9 ஆணடுகளாக நிறைவேற்றப்படாத அரசு ஆணையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினர் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்