அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.
காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ. 42.87/42.88 என்ற அளவில் இருந்தது.
இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா அதிகம்.
நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.82/42.83.
காலை பங்குச் சந்தை ஆரம்பிக்கும் போது அதிக அளவு குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. பிறகு அந்நிய முதலீடு வருவது அதிகரித்ததால் பங்குச் சந்தை முன்னேறியது.
இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் 1 டாலர் ரூ. 42.83/42.85 என்ற விலையில் விற்பனையானது. பிறகு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது.
ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான போக்கு இருந்தது. அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் சுமார் 136 டாலராக அதிகரித்தது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கியதால், இதன் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.