வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 24 பைசா குறைந்தது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், அந்நியச் செலவாணி சந்தையில் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக அளவு டாலரை வாங்கின. அத்துடன் பங்குச் சந்தை காலையில் இருந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் அதிக அளவு டாலர் வாங்குவதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு அதிகரித்தது.
இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.42.90/42.93 ஆக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.42.66/42.68.
காலை 10.30 மணியளவில் 1 டாலர் ரூ.42.89/42.91 என்ற அளவில் விற்பனையானது.