ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்தது!

திங்கள், 26 மே 2008 (13:13 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 5 பைசா குறைந்தது.

பணவீக்கம், பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவற்றின் காரணமாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களின் மாத இறுதி நிதித் தேவைக்காக டாலர் வாங்குதலின் காரணமாகவும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.42.70/ 71 என்ற நிலையிலிருந்து இன்று காலை ரூ.42.75/ 76 ஆக குறைந்துள்ளதாக நிதிச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்