வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்தது.
இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.42.75/ 42.76 என்ற அளவில் தொடங்கியது.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.60/42.61
வர்த்தகம் தொடங்கிய பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு சிறது அதிகரித்து 1 டாலர் ரூ. 42.72/42.73 என்ற அளவில் விற்பனையானது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 1 பீப்பாய் 130 டாலராக உயர்ந்தது. அத்துடன் பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் சரிந்ததால், அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு, இன்று அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்ற வெள்ளிக்கிழமை 1 டாலரின் மதிப்பு ரூ.42.92 ஆக அதிகரித்தது. இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான், டாலரின் மதிப்பு இந்த அளவிற்கு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.