டாலர் மதிப்பு 14 பைசா உயர்வு!

செவ்வாய், 20 மே 2008 (16:36 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 14 பைசா குறைந்தது.

இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.42.59/ 42.61 என்ற அளவில் தொடங்கியது.

பிறகு வர்த்தகம் தொடங்கிய போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து 1 டாலரின் மதிப்பு ரூ. 42.68/42.69 என்ற அளவில் விற்பனையானது.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ. 42.54/42.55.

இன்று காலையில் இந்தியா உட்பட ஆசிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன. அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 127 டாலராக உயர்ந்தது. இந்தியா உள்நாட்டு தேவையில் 70 விழுக்காடு பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதன் விலை உயர்வால் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில், இந்தியாவின் இறக்குமதி செலவு மேலும் அதிகரிக்கும. ஏற்கனேவ இந்தியாவின் இறக்குமதியின் மதிப்பு, ஏற்றுமதியை விட அதிகமாக இருக்கின்றது.

இத்துடனகடந்சிவாரங்களாபணவீக்கமஅதிகரித்தவருவதால், அந்நிமுதலீடதடபடுமஎன்கருத்தஅந்நியசசெலாவணி சந்தையிலநிலவுகிறது.

இதனால் கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு, இன்று அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்