வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 20 பைசா அதிகரித்தது.
இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.42.63/ 42.64 என்ற அளவில் இருந்தது.
பிறகு வர்த்தகம் தொடங்கிய போது காலை 11.30 மணியளவில் 1 டாலரின் மதிப்பு ரூ. 42.55/56 என்ற அளவில் விற்பனையானது.
நேற்றை இறுதி விலை 1 டாலர் ரூ. 42.75/42.76.
கடந்த சில நாட்களாக பெட்ரோலிய நிறுவனங்களும். இறக்குமதி நிறுவனங்களும் அதிகளவு டாலரை வாங்கின. இன்று பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்று அந்நியச் செலாவணி சந்தையின் இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசா குறைந்தது. அதே போல் யூரோவுக்கு நிகரான மதிப்பும் 63 பைசாவும், பிரிட்டன் ஃபவுண்ட்டுக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு 63 பைசா குறைந்தது.